தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தொழிற்சங்கத்தினர் மறியலில் 258 பேர் கைது

தொழிற்சங்கத்தினர் மறியலில் 258 பேர் கைது

தொழிற்சங்கத்தினர் மறியலில் 258 பேர் கைது


ADDED : பிப் 17, 2024 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2024 07:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு : உணவு, மருந்துகள், வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்டவை மீதான ஜி.எஸ்.டி., வரியை நீக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். 44 தொழிலாளர் நலச்சட்டங்களை, 4 தொகுப்புகளாக மாற்றியதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் சார்பில் தேசிய அளவில் நேற்று பொது வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் வேலை நிறுத்தத்துடன், ஈரோடு காளை மாட்டு சிலை அருகே மறியல் போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், எல்.பி.எப்., கோபால், ஏ.ஐ.டி.யு.சி., சின்னசாமி, எச்.எம்.எஸ்., சண்முகம் உட்பட பலர் மறியலில் ஈடுபட்டனர். காளை மாட்டு சிலையில் இருந்து ரயில்வே ஸ்டேஷனை நோக்கில் செல்ல முயன்ற, 54 பெண்கள் மற்றும், 154 ஆண்கள் என, 258 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us