/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாக்காளர் சிறப்பு முகாமில் படிவம் தந்த 25,909 பேர்
/
வாக்காளர் சிறப்பு முகாமில் படிவம் தந்த 25,909 பேர்
வாக்காளர் சிறப்பு முகாமில் படிவம் தந்த 25,909 பேர்
வாக்காளர் சிறப்பு முகாமில் படிவம் தந்த 25,909 பேர்
ADDED : ஜன 06, 2026 08:04 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான சிறப்பு முகாம் கடந்த, 3, 4ல் மாவட்ட அளவில் உள்ள, 2,379 ஓட்டுச்சாவடிகளில் நடந்தது.
இரு நாட்கள் நடந்த முகாமில், புதியதாக பெயர் சேர்க்க, 17,412 பேர்; பெயர் நீக்கம் செய்ய, 356 பேர்; பெயர் திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் இணைப்பு தொடர்பாக, 8,141 என, 25,909 பேர் படிவம் அளித்துள்ளனர். தவிர பெயர் சேர்த்தல் உள்ளிட்ட சேவைகளை ஆன்லைனில், www.voters.eci.gov.in என்ற இணைய தளம் மூலமும், Voter Helpline என்ற மொபைல் செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம்.
மாவட்டத்தில் இரண்டு முறை நடந்த முகாமில், 55,960 படிவம் பெறப்பட்டுள்ளது. இவற்றை விசாரித்து, ஆவணங்களை உறுதி செய்து, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பும், திருத்தமும் மேற்கொள்ளப்படும் என்று, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.