ADDED : ஆக 13, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிக்கிறது.
மழையின்மையால் பொதுமக்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் கவலை
அடைந்துள்ளனர். தென் மேற்கு பருவ மழை இல்லாததால் செடி,கொடிகள்
காய்ந்துள்ளன. போதிய மழையின்மையால், வன விலங்குகள் வனத்தை ஒட்டிய கிராமங்களுக்குள் நீர் தேடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 2 நாட்களாக பரவலாக ஓரிரு இடங்களில்
மட்டும் மழை பெய்கிறது. நேற்று முன் தினம் நம்பியூரில் அதிகபட்சமாக
26 மி.மீ., மழை பெய்தது. பவானியில், 12, அம்மாபேட்டை, 8.40,
வரட்டுபள்ளம் அணை, 16.40, கோபி, 3.20, எலந்தகுட்டைமேடு, 1.80,
குண்டேரிபள்ளம் அணை, 23.60, பவானிசாகர் அணை, 4.80 மி.மீ., மழை
பெய்துள்ளது.
