தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகளிர் உரிமைத்தொகை கோரி குவிந்த 26,675 விண்ணப்பங்கள்

மகளிர் உரிமைத்தொகை கோரி குவிந்த 26,675 விண்ணப்பங்கள்

மகளிர் உரிமைத்தொகை கோரி குவிந்த 26,675 விண்ணப்பங்கள்


ADDED : ஆக 04, 2025 08:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2025 08:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஜூலை 30ம் தேதி வரை நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில், மகளிர் உரிமைத்தொகைகோரி, 26, 675 விண்ணப்பங்கள் குவிந்தன.

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், மக்களிடமிருந்து, 15 அரசு துறை சார்ந்த, 46 வகை விண்ணப்பம் பெறப்படுகிறது. இதில்லாமல் முகாம்களில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க பெண்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் நான்கு கட்டங்களாக, 325 முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 120 முகாம்கள் நடத்தப்படுகின்றன. கடந்த 15 முதல் 30 ம் தேதி வரை, 53 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம், 56 ஆயிரத்து 191 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.அதிகபட்சமாக, திருப்பூர் வடக்கு தாலுகா முகாம்களில், 8,595; திருப்பூர் தெற்கு தாலுகாவில், 7,545 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. தாராபுரத்தில், 7,527; அவிநாசியில், 7,120; உடுமலையில், 6,672; காங்கயத்தில் 6364; பல்லடத்தில்,5,252; ஊத்துக்குளியில் 4,437; மடத்துக்குளத்தில், 2679 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மகளிர் உரிமைத்தொகைகோரும் விண்ணப்பங்களே அதிகம் பதிவாகி வருகிறது. பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில், 47.47 சதவீதம் அதாவது 26 ஆயிரத்து 675 விண்ணப்பங்கள், மகளிர் உரிமைத்தொகை கேட்டு தரப்பட்டவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us