27,717 மாற்றுத்திறனாளிகளுக்கு யூ.டி.ஐ.டி., அட்டை வழங்கல்
27,717 மாற்றுத்திறனாளிகளுக்கு யூ.டி.ஐ.டி., அட்டை வழங்கல்
ADDED : ஜூலை 16, 2026 04:05 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு
செய்தவர்களில், 27,717 பேருக்கு யூ.டி.ஐ.டி., தேசிய அடையாள அட்டை
வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினர் கூறியதாவது:
எவ்வித மாற்றுத்திறனாளிகளாக
உள்ளவர்களும், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்து,
மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையை பெற வேண்டும். தகுதியான
நபர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் பெற்றுத்
தரப்படுகிறது. இதற்காக தேசிய அடையாள அட்டையான, யூ.டி.ஐ.டி., அட்டை
பெற வேண்டும்.
இவ்வாறாக மாவட்ட அளவில், 31,314
மாற்றுத்திறனாளிகளிடம் யூ.டி.ஐ.டி., அடையாள அட்டை பெற விண்ணப்பம்
பெறப்பட்டன. அதில் போதிய ஆவணங்கள் வழங்கப்படாததால், 1,969
மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
விண்ணப்பம் செய்து, 69 விண்ணப்பங் கள் விசாரணையில் உள்ளன. 871
விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 147 விண்ணப்பங்கள் மீது
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள, 27,717 கார்டுகள் தயார்
செய்யப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் தேவையான
ஆவணங்களை இணைத்து, விரைவில் கிடைப்பதற்கான நடவடிக்கை
மேற்கொள்ளப்படும். தற்போதைய நிலையில், யூ.டி. ஐ.டி., கார்டு எண்
மூலமே, அனைத்து நலத்திட்ட உதவிகள், சலுகைகள், பாஸ் உள்ளிட்டவை பெற
இயலும். இவ்வாறு கூறினர்.
