ADDED : செப் 24, 2026 06:46 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:டி.என்.பி.எஸ்.சி.,யின் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி-1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு வரும், 27ல் நடக்கிறது.
ஈரோடு
வட்டத்தில் உள்ள, 23 தேர்வு கூடங்களில், 6,837 தேர்வர்கள் தேர்வு எழுத
உள்ளனர். அன்று காலை, 9:30 முதல், மதியம், 12:30 மணி வரை நடக்கும்
தேர்வுக்கு, காலை, 8:30 முதல், 9:00 மணிக்குள் தேர்வு கூடத்துக்குள்
தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். காலை, 9:00 மணிக்கு தேர்வுக்கூட
நுழைவு வாயில் மூடப்படும். 9:00 மணிக்கு மேல் வருகை புரியும் தேர்வர்கள்
எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு பணிகளை
கண்காணிக்க, 5 நடமாடும் குழுக்கள், 23 ஆய்வு அலுவலர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
