ADDED : மார் 28, 2024 07:08 AM
பவானி : பவானி அருகே அண்ணா நகரில், நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பைக்கில் அவ்வழியே வந்த பூதப்பாடியை சேர்ந்த பாலுசாமி என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் உரிய ஆவணமின்றி வைத்திருந்த, 81 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.இதேபோல், அம்மாபேட்டை கோனேரிப்பட்டி பேரேஜ் அருகில் வாகன சோனையில் ஈடுபட்டிருந்தபோது, காரில் வந்த சேலம் மாவட்டம், இடைப்பாடி ஏணி பளிக்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ், 36, என்பவர் கொண்டு வந்த, 69 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், பவானி பழைய பாலம் அருகில் நடந்த வாகன சோதனையில், காரில் வந்த கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்த சந்திப் என்பவர் ஆவணமின்றி கொண்டு வந்த, ஒரு லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகையை, பவானி கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
