/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேலைவாய்ப்பு முகாமில் 287 பேர் தேர்வு
/
வேலைவாய்ப்பு முகாமில் 287 பேர் தேர்வு
ADDED : செப் 22, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, ரங்கம்பாளையத்தில், மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
ஈரோடு எம்.பி., பிரகாஷ் முகாமை துவக்கி வைத்தும், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். முகாமில் பல்வேறு பகுதியை சேர்ந்த, 57 வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், 4 பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்றன. 1,040 பேர் கலந்து கொண்ட நிலையில், 287 பேருக்கு பணி நியமன ஆணை கிடைத்தது.