ADDED : அக் 30, 2024 06:25 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்: காங்கேயம் தாலுகாவில், 29 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, திருப்பூர் மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க, ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டது. இந்த மனுக்களை அதிகாரிகள் குழுவினர் பரிசீலனை செய்தனர். காங்கேயம் தாலுகாவில், ௩௦ பேர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில், தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, காங்கேயம் தாசில்தார் மோகனன் ஆகியோர் காங்கேயம், வெள்ளகோவில், முத்துார், நத்தகாடையூர், ஊதியூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ௧௫ நிரந்தர கடைகள், ௧௪ தற்காலிக கடைகள் என, 29 கடைகளுக்கு அனுமதி அளித்தனர். உரிய விதிகளின்படி செயல்படவும் அறிவுறுத்தியுள்ளனர்.
