/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2ம் கட்ட வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
/
2ம் கட்ட வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
ADDED : ஜன 04, 2026 05:33 AM
ஈரோடு: தமிழகத்தில் கடந்த, 19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தில், 19.97 லட்சம் வாக்காளர்களில், 3.35 லட்சம் பேர் நீக்கப்பட்டு, 16 லட்சத்து, 71,760 பேர் இடம் பெற்றனர். அப்போது முதல், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் படிவம்-6 மற்றும் உறுதி மொழிப்படிவம், ஆவணங்கள் வழங்கி வருகின்றனர். கடந்த, 1 ல், 18 வயது நிறைவடைந்தவர்களும் புதிய வாக்காளர்களாக ஆவணங்களுடன் இணைந்து வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த, 27, 28ல் நடந்த சிறப்பு முகாம் நடந்தது. இரண்டாம் கட்ட முகாம் நேற்று நடந்தது. இன்றும் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள, 2,379 ஓட்டுச்சாவடிகளிலும் முகாம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூடுதல் தகவல் பெற, 1950, 90425 80535 உட்பட அந்தந்த தொகுதி அலுவலகங்களில் தொடர்பு கொள்ளலாம்.

