/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
3 பழங்குற்றவாளிகள்பைக் திருட்டில் கைது
/
3 பழங்குற்றவாளிகள்பைக் திருட்டில் கைது
ADDED : ஏப் 06, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
3 பழங்குற்றவாளிகள்பைக் திருட்டில் கைது
ஈரோடு:நாமக்கல் மாவட்டம் வெடியரசம்பாளையம், பூலக்காட்டூரை சேர்ந்தவர் சீனிவாசன். ஈரோட்டில் குமலன்குட்டையில் ஒரு கார் நிறுவனத்தின் முன் நிறுத்தப்பட்ட இவரது பைக் திருட்டு போனது. புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரித்தனர்.
சூரம்பட்டியை சேர்ந்த சந்தோஷ், 20, நிஷாந்த், 22, கார்த்தி, 20, ஆகியோர் திருடியது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், மூன்று பைக்குகளை அவர்களிடம் பறிமுதல் செய்தனர். மூவர் மீதும் அடிதடி, திருட்டு வழக்கு சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

