ADDED : அக் 26, 2024 08:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:நாமக்கல் மாவட்டம், வெப்படை, பல்லக்காபாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 43; தொழிலாளியான இவர், நாமக்கல்லைச் சேர்ந்த, 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு உடந்தையாக இவரது மனைவி இந்திராணி, 30, இருந்துள்ளார்.
இந்திராணி நண்பர்களான நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் சோழசிராமணி ரமேஷ், 44, வினோத்குமார், அரவிந்த், சுதாகர் ஆகியோரும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
சிறுமி புகாரின்படி ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். செந்தில்குமார், இந்திராணி, ரமேஷை கைது செய்தனர். தலைமறைவான வினோத்குமார், அரவிந்த், சுதாகரை தேடி வருகின்றனர்.