ADDED : ஜூலை 04, 2026 04:14 AM

அந்தியூர்:தமிழக-கர்நாடக
எல்லையான பர்கூர்மலையை அடுத்துள்ள கர்கேகண்டி பாலாறு பள்ளத்தின்
வழியாக மூன்று பேர், கையில் பையுடன் தட்டக்கரை வனப்பகுதி வேலாம்பட்டி
பிரிவில் நேற்று நின்று கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து சென்ற
தட்டகரை ரேஞ்சர் ராமலிங்கம், வனகாப்பாளர் உமாநாத் மற்றும் ஊழியர்கள்
மூவரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் மருதுார் ஆனந்தராஜ்,
32; அந்தியூர் அருகே கிருஷ்ணாபுரம் தேவராஜ், 23; கேரள மாநிலம்
மலப்புரம் மாவட்டம் மஞ்சக்கண்டே பகுதி ரிஸ்வான், 19, என தெரிந்தது.
மூவரும் வனப்பகுதியில் உள்ள சிவன் கோவிலில், 2 அடி நீள 2 வெண்கலை
நந்தி சிலைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர்.
சிலைகளை பறிமுதல்
செய்த வனத்துறையினர் மூவரையும் பர்கூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து பர்கூர் போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட ஆனந்த
ராஜ்
அந்தியூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் தங்கி கட்டட வேலைக்கும், கேரளாவை
சேர்ந்த ரிஸ்வானும் கிருஷ்ணாபுரத்தில் தங்கி, பேக்கரி வேலைக்கும்
செல்கின்றனர்.
அதே பகுதியை சேர்ந்த தேவராஜூடன் பழக்கம் ஏற்பட்டு மூவரும் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதில்
ஆனந்தராஜ் மீது, நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் கொலை வழக்கும், தேவராஜ்
மீது அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில் அடிதடி வழக்கும் நிலுவையில் உள்ளது.
மூவரையும் கைது செய்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு கூறினர்.
