ADDED : மார் 27, 2026 05:03 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், 73 பூத்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஈரோடு மேற்கு தொகுதியில், காளிங்கராயன்பாளையத்தில் ஒரு ஓட்டுச்சாவடி, ஆர்.என்.புதுாரில் இரு ஓட்டுச்சாவடி என, மூன்று ஓட்டுச்சாவடி பதற்றமானவையாக உள்ளன.
இங்கு மத்திய துணை ராணுவ வீரர்கள், ஓட்டுச்சாவடி நுழைவு மற்றும் வெளிப்பகுதியிலும், உள்ளூர் போலீஸார், ஆயுதப்படை போலீஸார் ஓட்டுச்சாவடி வளாகத்திலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
ரூ.1.82 லட்சம் பறிமுதல்காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டசபை தொகுதி, தேர்தல் கண்காணிப்பு குழுவினர், நத்தகாடையூர் அருகே வாகன சோத-னையில் ஈடுபட்டிருந்தனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ஈஸ்வரமூர்த்தி, பழனியில் பள்-ளியில் படிக்கும் தனது மகனின் படிப்பு செலவுக்கு, 82 ஆயிரம் ரூபாய் கொண்டு சென்றார். உரிய ஆவணம் இல்லாததால் பறி-முதல் செய்தனர்.
இதேபோல் முத்துார்-கொடுமுடி ரோட்டில், மொடக்குறிச்சியை சேர்ந்த பழனிச்சாமியிடம், உரிய ஆவணம் இல்லாததால், ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
