/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
3 நாள் கைத்தறி கண்காட்சி விற்பனை துவக்கம்
/
3 நாள் கைத்தறி கண்காட்சி விற்பனை துவக்கம்
ADDED : ஆக 08, 2025 01:03 AM
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று கைத்தறித்துறை சார்பில், தேசிய கைத்தறி தின கண்காட்சி விற்பனை துவக்க விழாவுக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார்.
கண்காட்சியை துவக்கி வைத்து, நெசவாளர்களுக்கு, 44.55 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:
கைத்தறி கண்காட்சி, 3 நாட்கள் நடக்கிறது. கைத்தறி நெசவாளர்கள் உருவாக்கிய பெட்ஷீட், ஜமுக்காளம், காட்டன் சேலை, மென்பட்டு சேலை, திரைச்சீலை, படுக்கை விரிப்பு, போர்வை, துண்டு, மேட் என பல பொருட்கள், 20 சதவீத விற்பனையில் வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு சரகத்தில், 190 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், 57 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் சென்னிமலை பெட்ஷீட், பவானி ஜமுக்காளம் போன்றவை உலக பிரசித்தி பெற்றவை. தவிர மென்பட்டு சேலைகள், கோரா காட்டன், கால் மிதி மேட்டுகள், யோகா மேட்டுகள், துண்டுகள் அதிகமாக
உற்பத்தியாகிறது.
நெசவாளர்களுக்கு அச்சு, ஒடி, நாடா போன்ற தறி உபகரணங்கள், திட்டத்தொகைக்கான காசோலை என, 44.45 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்
பட்டுள்ளன.
இவ்வாறு கூறினார்.
எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், கைத்தறி துறை உதவி இயக்குனர் சரவணன், உதவி அமலாக்க அலுவலர் ஜெயவேல் கணேசன், ஜெயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.