தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மீன் பிடித்த 3 பேருக்கு காப்பு

மீன் பிடித்த 3 பேருக்கு காப்பு

மீன் பிடித்த 3 பேருக்கு காப்பு


ADDED : அக் 26, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணையில், திருட்டுத்தனமாக மீன் பிடிக்கப்பட்டு வெளிச்சந்தையில் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், பவானிசாகர் மீன் வளர்ச்சி கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

அப்போது, பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் மணல்மேடு என்ற இடத்தில், திருட்டுத்தனமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த மூவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மீன் வளர்ச்சி கழக உதவி மேலாளர் ஆனந்தி புகார்படி, பவானிசாகர் போலீசார் நடத்திய விசாரணையில், கோடேபாளையத்தை சேர்ந்த மகேந்திரன், 19, தொப்பம்பாளையம் அண்ணா நகர் மிதுன்குமார், 20, சொலவனுார் நவீன் குமார், 19, ஆகியோர் திருட்டுத்தனமாக மீன் பிடித்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து, 4,200 ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ மீன் மற்றும் மீன் பிடிக்க பயன்படுத்திய வலை, இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us