ADDED : மார் 23, 2026 02:36 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு குமலன்குட்டையில் இருந்து ஈரோடு மாநகரை நோக்கி, நேற்று முன்தினம் இரவு கியா கார் சென்றது. கண்ணி-மைக்கும் நேரத்தில் ரோடு டிவைடரில் வேகமாக மோதியது. இதில் நான்கு டிவைடர் உடைந்து சேதமானது.
சத்தம்க கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். கார் கதவை திறந்து உள்ளே இருந்த மூவரை மீட்டனர். தகவலறிந்து சூரம்பட்டி போலீசார் சென்று விசாரித்தனர். பட்டறையில் இருந்து கார் கிளம்பியுள்ளது. பழுது சரி செய்யப்படாத நிலையில் ஓட்டியதால் விபத்து ஏற்பட்-டது தெரிந்தது. சூரம்பட்டி ஸ்டேஷனுக்கு, போலீசார் காரை கொண்டு சென்றனர்.
