ADDED : அக் 03, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி;புன்செய்
புளியம்பட்டி போலீசார், விண்ணப்பள்ளி பகுதியில் நேற்று ரோந்தில்
ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள தனியார் கல்லுாரி பின்புறம் முட்புதர்
காட்டில், ஆசாமி ஒருவர் கையில் கட்டை பையுடன் கஞ்சா விற்றுக்
கொண்டிருந்ததை பார்த்து மடக்கினர்.
விசாரணையில் சத்தியமங்கலம்
அருகே கெஞ்சனுாரை சேர்ந்த அப்புசாமி, 43, என்பது தெரிந்தது. பையில்
வைத்திருந்த, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று கிலோ கஞ்சாவை
பறிமுதல் செய்தனர். அப்புசாமி மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில்,
40க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
