ADDED : மார் 13, 2026 04:42 AM

அ நிறம் | அளவு
தாராபுரம்: தாராபுரம் போலீசார், தாராபுரம் ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று மாலை ரோந்து சென்றனர்.
அப்போது பைக்கில் சென்ற மூவரிடம் சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பையில், ௧,௧௦௦ கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் தாராபுரம், எல்லிஸ் நகர் கோகுல், 22, மேற்கு பஜனை மட தெரு பாலயுவராஜ், 22, கொல்லப்பட்டி பிரபு, 20, என தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்தனர்.
