ADDED : ஜன 11, 2026 04:55 AM
கோபி: கோபி அருகே டி.ஜி.புதுாரை சேர்ந்தவர் நிஷா, 22; தனியார் கம்-பெனி ஊழியர். நாய்க்கன்காடு உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். கடந்த, 4ம் தேதி அதிகாலை முதல் காணவில்லை. அவரின் தந்தை ரவி புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.
* சித்தோடு அருகே ராயபாளையம் புதுார், நீலிக்கரட்டை சேர்ந்த மாதேஸ்வரனின், 16 வயது மகள், பத்தாம் வகுப்பு வரை படித்து-விட்டு வீட்டில் இருந்து வருகிறார். பெற்றோர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமி மாயமாகி விட்டார். மாதேஸ்வரன் புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர். * சித்தோடு அருகே நசியனுாரை சேர்ந்தவர் பாபு பிரகாஷ், 26; சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி, ஐஸ்வர்யா, 25; தம்ப-திக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பிரகாஷ் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். மனைவியை காண-வில்லை. குழந்தை அவரது தாயாரிடம் இருந்துத. பிரகாஷ் புகா-ரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.

