ADDED : ஆக 23, 2024 04:34 AM
ஈரோடு: ஈரோடு, வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் மகன் ஹரி கேசவன், 13; தனியார் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன். குறும்பு செய்வதாகவும், பிற மாணவர்களுக்கு இடை-யூறாக இருப்பதாகவும் பள்ளி தரப்பில் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் மகனை கண்டித்துள்ளனர். இந்நி-லையில் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்-பிய சிறுவன், வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில் மாயமாகி விட்டார். சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.
* சத்தி நகராட்சி பள்ளி வடக்கு வீதியை சேர்ந்த கலீல் பாஷா மகன், சத்தியில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் பள்ளிவாசலுக்கு சென்றவர் வீடு திரும்ப-வில்லை. தாய் புகாரின்படி சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.
* ஆசனுார் அருகேயுள்ள ஒங்கல்வாடியை சேர்ந்த சரவணன் மகள் மணிமேகலை, 23; ஆசனுார் வனச்சரக அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். கடந்த, 17ம் தேதி வேலைக்கு சென்-றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. சரவணன் புகாரின்படி ஆசனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

