ADDED : அக் 30, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
ஈரோடு, அக். 30-
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி தானப்பன், 35; ஈரோட்டில் சமையல் வேலை செய்கிறார். மணிக்கூண்டு பகுதியில் டீ குடித்து கொண்டிருந்தவரை மிரட்டி, 3,000 ரூபாயை பறித்து சென்றனர்.
அவர் புகாரின்படி விசாரித்த ஈரோடு டவுன் போலீசார், ஈரோடு, வி.வி.சி.ஆர். நகர் 2வது வீதி மணிகண்டன், 26; தர்மபுரி, பென்னாகரம், கொண்டைநல்லி விக்னேஷ், 21; ஈரோடு, அய்யனாரப்பன் கோவில் வீதி சந்தோஷ், 20, ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

