தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு எம்.எஸ்.சாலையில் 10 அடி இடைவெளியில் 3 வேகத்தடைகள்

ஈரோடு எம்.எஸ்.சாலையில் 10 அடி இடைவெளியில் 3 வேகத்தடைகள்

ஈரோடு எம்.எஸ்.சாலையில் 10 அடி இடைவெளியில் 3 வேகத்தடைகள்


ADDED : மே 15, 2026 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 06:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு::ஈரோடு எம்.எஸ்.சாலையில் மாநகராட்சி பிரதான அலுவலகம் உள்ளது. எதிரே பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த சாலை மாநில நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்டது. மாநகராட்சி அலுவலகம்-பெரிய மாரியம்மன் கோவில் முன்புறம் ஒரு வேகத்தடை உள்ளது.

இந்நிலையில் எம்.எஸ்.சாலையில் இருந்து மாநகராட்சி அலுவலகத்துக்குள் செல்லும் பிரிவு அருகே புதிதாக, அடுத்தடுத்து இரு வேகத்தடைகளை ஒரே இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் நான்கு நாட்களுக்கு முன் அமைத்துள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் தடுமாறி விழுந்ததால் வேகத்தடை மீது வெள்ளை பெயிண்ட் அடித்தனர். மாநில நெடுஞ்சாலை துறையிடம் இதற்கான அனுமதியும் பெறவில்லை.

மாநகராட்சி வளாகத்தில் இருந்து புறப்படும் அலுவலர்களின் வாகனம் இடையூறுமின்றி எம்.எஸ்., சாலையில் பயணிக்கவே, வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதாக, போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். அதாவது, 10 அடி துாரத்துக்குள் மூன்று வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் ப.செ.பார்க் சிக்னலில் இருந்து, 10 மீட்டர் இடைவெளிக்குள், இந்த வேகத்தடைகள் அமைத்திருப்பது, புது நடைமுறையாக உள்ளது என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us