/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் ஜவுளி பண்டல் திருடிய கோபியை சேர்ந்த 3 பெண்கள் கைது
/
ஈரோட்டில் ஜவுளி பண்டல் திருடிய கோபியை சேர்ந்த 3 பெண்கள் கைது
ஈரோட்டில் ஜவுளி பண்டல் திருடிய கோபியை சேர்ந்த 3 பெண்கள் கைது
ஈரோட்டில் ஜவுளி பண்டல் திருடிய கோபியை சேர்ந்த 3 பெண்கள் கைது
ADDED : அக் 25, 2024 12:56 AM
ஈரோட்டில் ஜவுளி பண்டல் திருடிய
கோபியை சேர்ந்த 3 பெண்கள் கைது
ஈரோட்டில் ஜவுளி வாங்குவது போல நடித்து, ஜவுளி பண்டல் திருடிய மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு ப.செ.பார்க், ஜவுளி வணிக வளாகத்தில், துணி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தரை தளத்தில் ஒரு கடையில் ஜவுளி வாங்க ஏராளமான பெண்கள் திரண்டிருந்தனர். கூட்டம் குறைந்ததும் கடை உரிமையாளர், பண்டல்களை சரிபார்த்தபோது ஒரு துணி பண்டல் மாயமாகி
இருந்தது.
இதனால் வணிக வளாகத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்தனர். இதில் மூன்று பெண்கள், கடை உரிமையாளரை திசை திருப்பி, கடை முன் வைத்திருந்த, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பண்டலை திருடி சென்றது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் விசாரித்த, ஈரோடு டவுன் போலீசார், ஈரோடு மாவட்டம் கோபி கணக்கம்பாளையம் பவித்ரா, 25, கோகிலா, 38. சுசீலா, 20, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.