/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட இரு ரவுடிகளுக்கு 3 ஆண்டு சிறை
/
ஈரோட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட இரு ரவுடிகளுக்கு 3 ஆண்டு சிறை
ஈரோட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட இரு ரவுடிகளுக்கு 3 ஆண்டு சிறை
ஈரோட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட இரு ரவுடிகளுக்கு 3 ஆண்டு சிறை
ADDED : அக் 30, 2024 06:43 AM
ஈரோடு: ஈரோட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி உட்பட இருவருக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈரோடு, வீரப்பன் சத்திரம், ஜான்சி நகரை சேர்ந்த அம்பேத்கர் மகன் குட்ட சாக்கு (எ) லோகேஷ்வரன், 26; இவர் மீது அடிதடி, போதை பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. ஈரோடு, மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 39; இவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த, 2019 லோகேஷ்வரன், ஆனந்தகுமார் இருவரும், ஈரோடு மாநகரில் வழிப்பறியில் ஈடுபட்டதாக வீரப்பன்சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இறுதி விசாரணை முடிந்து மாஜிஸ்திரேட் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கும் மூன்றாண்டு சிறை தண்டனை, தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இருவரையும் கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.