ADDED : மே 15, 2026 06:13 AM
ஈரோடு::தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து, 500 மீட்டர் துாரத்துக்குள் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார்.
இந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில், 39 டாஸ்மாக் கடை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த, 12ம் தேதி, சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே இரு கடைகள் மூடப்பட்டன. நேற்று முன்தினம் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் பகுதி நாச்சியப்பா வீதி பூக்கடை அருகே உள்ள டாஸ்மாக் கடை, கொங்காலம்மன் கோவில் வீதிக்கு அருகே நேதாஜி சாலையில் உள்ள கடை, ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே பெருந்துறை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை, கொடுமுடி மற்றும் பெருந்துறை பகுதியில், 2 கடைகள் என ஐந்து கடைகளை மூடப்பட்டன.
ஈரோடு பெரியார் மன்றம் அருகே நேற்று ஒரு கடை, மரப்பாலத்தில் ஒரு கடை, காளை மாட்டு சிலை அருகே ஒரு கடை மற்றும் சத்தியமங்கலம், பெருந்துறையில் மூன்று கடைகள் என 30 கடைகளை நேற்று மூடியுள்ளனர். இத்துடன் மாவட்டத்தில், 37 கடைகள் மூடப்பட்டுள்ளன.
* அந்தியூரிலிருந்து அத்தாணி செல்லும் வழியில் தவிட்டுப்பாளையத்தில் இரு டாஸ்மாக் கடைகள், வெள்ளித்திருப்பூர் போலீஸ் ஷ்டேன் எல்லையில் மூலக்கடை, ஒலகடத்தில் ஒரு கடை என நான்கு கடைகள் நேற்று ஒரே நாளில் மூடப்பட்டன.
