/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தெருநாய்கள் கடித்ததில் 300 கோழிகள் பலி
/
தெருநாய்கள் கடித்ததில் 300 கோழிகள் பலி
ADDED : ஜன 05, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் : காங்கேயம் அருகேயுள்ள அழகே கவுண்டன்புதுாரை சேர்ந்தவர் கோபால்ராஜ். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். அங்கு தனியார் நிறுவனத்தின், 5,600 கோழிகளை லீசுக்கு வளர்த்து வருகிறார். நேற்று நள்ளிரவில் பண்ணைக்குள் தெருநாய்கள் புகுந்து கடித்தன.
இதில் கடிபட்டும், மிதிபட்டும், ௩௦௦ கோழிகள் பலியாகி விட்டன. தெருநாய்களால் காங்கேயம், பாப்பினி, ஊதியூர், படியூர், வெள்ளகோவில் பகுதிகளில் ஆடுகள் பலியாவது அவ்வப்போது நடந்து வருகிறது. தற்போது கோழிப்பண்ணையிலும் தெருநாய்கள் புகுந்தது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

