/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
32 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்
/
32 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்
ADDED : ஆக 27, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில், வெள்ளகோவிலில் பொது சுகாதாரத்துறை உணவு பாதுகாப்பு துறை, வெள்ளகோவில் நகராட்சி துறை அதிகாரிகள், புகையிலை தடுப்பு கள ஆய்வில் ஈடுபட்டனர். இதில் வெள்ளகோவில் பஸ் ஸ்டாண்டில், 32 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 10 கிலோ கலப்பட டீத்துாள் பறிமுதல் செய்து அழித்தனர்.
இந்த கடைகளுக்கு, 5,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளர் கதிரவன் மற்றும் வேல்முருகன், காவல்துறை உதவி ஆய்வாளர் முகமது இஸ்மாயில் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பாலசுப்பிரமணியம், துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் ஈடுபட்டனர்.