ADDED : ஜன 17, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழக காவல் துறையில் ஒன்றரை ஆண்டுக்கு முன், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டது. இதில், 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்-சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போனால் சிறப்பு கவனம் செலுத்தி கண்டுபிடித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில், 2024ல் போலீஸ் ஸ்டேஷன்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக, 527 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் குழந்தைகள், 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்-சிறுமிகள் மற்றும் பெண்கள் தொடர்பான வழக்குகளை, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். குழந்தை விற்பனை தொடர்பான ஒரு வழக்கு, உ.பி., மாநிலத்துக்கு குழந்தையுடன் தாயை கடத்திசென்ற வழக்கு உள்பட, 31 சிறுவர்கள், 102 சிறுமிகள், 202 பெண்கள் என, 335 பேரை கடந்தாண்டில் மீட்டுள்ளனர்.