ADDED : ஆக 05, 2026 05:01 AM
ஈரோடு:அரச்சலுாரை
அடுத்த ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை, 221வது
நினைவு தினம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் அரசியல் கட்சியினர்,
அமைப்பினர், மக்கள் பங்கேற்றனர்.
போக்குவரத்துக்கு
எவ்விதத்திலும் இடையூறு செய்யக்கூடாது என்று, மாவட்ட போலீசார்
இவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர். ஆனாலும் சின்னமலை சிலைக்கு
மாலை அணிவிக்க வந்த சில அமைப்பினர் மக்களுக்கு இடையூறு
ஏற்படுத்தியும், போக்குவரத்து விதிமீறியும், கார் மற்றும்
பைக்குகளை தாறுமாறாக ஓட்டினர்.
இந்த வகையில் அமைப்புகள், அரசியல்
கட்சியினர் மீது ஈரோடு டவுன் சப்-டிவிசனில், 13 வழக்கு, பவானி
மற்றும் கோபி சப்-டிவிசனில், தலா இரண்டு வழக்கு, சத்தி
சப்-டிவிசனில், 5 வழக்கு, பெருந்துறை ரூரல் சப்-டிவிசனில் 12 வழக்கு
என, 34 வழக்குகள் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டதாக போலீசார்
தெரிவித்தனர்.
