/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணையில் தீ விபத்து3,480 கோழி குஞ்சு பலி
/
பண்ணையில் தீ விபத்து3,480 கோழி குஞ்சு பலி
ADDED : ஏப் 18, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:கோபி அருகே ஒட்டர் கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார், 47; அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் பண்ணையில் திடீரென தீப்பிடித்தது. கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள், மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஆனாலும் பண்ணையில் இருந்த, 3,480 கோழிக்குஞ்சு, மூன்று கொட்டகை, 30 கோழித் தீவன மூட்டை எரிந்து நாசமானது. மின் கசிவால் தீ விபத்து நடந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

