ADDED : மே 10, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அம்மாபேட்டையை அடுத்த சென்னம்பட்டி, ஜரத்தல், முரளி, சனிச்சந்தை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, சூறாவளிக் காற்று வீசியது.
காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல், ஜரத்தல் பகுதியில் தங்கராஜ் வாழை தோட்டத்தில், மூன்று ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த, 1,500க்கும் மேற்பட்ட நேந்திரம் ரக வாழை மரங்கள் முறிந்து சேதமாகின. சென்னம்பட்டியில் கார்த்திக்கு சொந்தமான, ௨,௦௦௦க்கும் மேற்பட்ட கதலி ரக வாழை மரங்கள் நாசமாகின. சென்னம்பட்டி அரசுப்பள்ளி மாணவர் விடுதியின் தடுப்புச்சுவர் இடிந்தது.