ADDED : மார் 25, 2024 01:23 AM
காங்கேயம்:ஈரோடு
லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம் சட்டசபை தொகுதியில், இரண்டு
லட்சத்து, 60 ஆயிரத்து, 854 வாக்காள உள்ளனர். இவர்கள் ஓட்டுப்பதிவு
செய்வதற்காக, 295 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான
முன்கட்ட பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர்
கலெக்டர் அலுவலகத்திலிருந்து, 356 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்,
காங்கேயம் தாசில்தார் அலுவலகத்துக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன்
நேற்று கொண்டு வரப்பட்டன. இயந்திரங்கள் வைப்பதற்காக ஏற்பாடு
செய்யப்பட்ட அறைகளில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார்,
காங்கேயம் தாசில்தார் மயில்சாமி முன்னிலையில் வைக்கப்பட்டன.
அந்த
அறைகளில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, துப்பாக்கி ஏந்திய
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பட்டியல் வெளியான
பிறகு, இந்த இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு, அந்தந்த
ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

