/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆக்கிரமிப்பில் இருந்த 36 சென்ட் நிலம் மீட்பு
/
ஆக்கிரமிப்பில் இருந்த 36 சென்ட் நிலம் மீட்பு
ADDED : அக் 08, 2025 01:17 AM
பவானி, அத்தாணி அருகே குப்பாண்டம்பாளையம் பஞ்., நஞ்சுண்டாபுரம் அருகே, நிலவியல் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள், 36 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இது சம்பந்தமாக வருவாய் துறையினர் சில மாதங்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பினர்.
ஆனாலும் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளாத நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடந்தது. அந்தியூர் தாசில்தார் பிரகாஷ் தலைமையிலான அலுவலர்கள், அந்த நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் கரும்பு பயிர்களை, ஜே.சி.பி.,இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். காலை, ௧௦:௦௦ மணிக்கு தொடங்கிய பணி, மதியம், ௨:௩௦ மணிக்கு முடிவுக்கு வந்தது.