/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமைதியான ஓட்டுப்பதிவுக்கு 36 அதி விரைவுப்படை குழு
/
அமைதியான ஓட்டுப்பதிவுக்கு 36 அதி விரைவுப்படை குழு
ADDED : ஏப் 19, 2024 06:33 AM
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் இன்று அமைதியான முறையில் நடப்பதை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் 36 கியூ.ஆர்.டி., (அதி விரைவுப்படை) குழு அமைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும், ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அந்த இடத்துக்கு இக்குழு விரைந்து சென்று, நடவடிக்கை எடுக்கும்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கியூ.ஆர்.டி., குழுவில் ஒரு இன்ஸ்பெக்டர், 3 போலீசார் என, 144 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர எஸ்.பி., தலைமையில் ஒரு குழுவும், ஏ.டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் மூன்று குழுவும், டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 10 குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களில் ஈரோடு போலீசார் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, குஜராத் போலீசாரும் உள்ளனர். இவ்வாறு கூறினர்.

