ADDED : ஏப் 30, 2026 05:31 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு வெண்டிபாளையம், காலிங்கராயன் வாய்க்கால் கரையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். மொடக்குறிச்சி போலீசார் நேற்று முன்தினம் அவரை பிடிக்க முயற்சித்தனர்.
அவர் போலீஸ் வருவதை பார்த்ததும், கையில் இருந்த வெள்ளை நிற சாக்கு பையை அங்கேயே போட்டு விட்டு தப்பினார். போலீசார் அந்த பையை சோதனை செய்தனர். அதில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 3.600 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சா பையை துாக்கி வீசிய நபர் யார் என, மொடக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
