மொடக்குறிச்சியில் தபால் ஓட்டு போட தகுதியான 3,630 பேர்
மொடக்குறிச்சியில் தபால் ஓட்டு போட தகுதியான 3,630 பேர்
ADDED : ஏப் 02, 2026 04:15 AM
ஈரோடுமொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளி
கள், கண் பார்வையற்றோர் என தபால் ஓட்டு போட, 3,630 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
மொடக்குறிச்சி தொகுதியில், 2,06,122 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். எனவே, பெண் வாக்காளர்களை கவர்பவர்களுக்கு தேர்தல் களம் சற்று எளிதாக இருக்கும். பா.ஜ., இன்னமும் இத்தொகுதிக்கான வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது. வேட்பாளர் அறிவிப்பு மேலும் இரு நாட்கள் ஆகலாம் என்பதை கட்சி தலைமை உறுதிபடுத்தி உள்ளது. அதன் பின்னரே, வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தை துவங்குவர். பா.ஜ.,வை பொறுத்தவரை தேர்தல் பிரசாரம் செய்ய குறுகிய கால அவகாசமே இருக்கும்.
தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு, வாக்காளர்களிடம் பிரசாரம் மேற்கொள்ள அரசியல் கட்சி
கள் இன்னமும் வீதியில் இறங்காத சூழலில், தேர்தல் தொடர்பான பணிகளை தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தி உள்ளது. மொடக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை, 85 வயதுக்கு மேற்பட்டோர், 2,065 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வையற்றோர், 1,565 பேர் என மொத்தம், 3,630 பேர் உள்ளனர். இவர்களில் தபால் ஓட்டு போட விண்ணப்பித்து இருப்போர், நேரில் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுபோட விருப்பம் தெரிவித்து இருப்போர் குறித்த பட்டியலை தேர்தல் அலுவலர்கள் தயார் செய்து வருகின்றனர்.
தேர்தல் கமிஷன் அறிவிக்கும் நாளில், தபால் ஓட்டு துவங்கி நடைபெறும் என தேர்தல் அலுவலர்கள்
தெரிவித்தனர்.
