/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' திட்டத்தில் 381 பேர் பதிவு
/
'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' திட்டத்தில் 381 பேர் பதிவு
'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' திட்டத்தில் 381 பேர் பதிவு
'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' திட்டத்தில் 381 பேர் பதிவு
ADDED : நவ 21, 2024 06:28 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' ஆலோசனை மையம் மூலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் தொழில் துவங்க, 381 பேர் பதிவு செய்துள்ளனர்.தமிழக அரசு, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ், 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' திட்டம் செயல்படுத்துகிறது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கான மண்டல ஆலோசனை மையம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இயங்குகிறது.
இது குறித்து, ஈரோடு திட்ட தொடர்பாளர் கோபிநாத் கூறியதா-வது: இத்திட்டத்தில், பெரிய தொழில் நடத்துவோர் மட்டுமின்றி, புதிய சிறு, குறு, நடுத்தர தொழில் துவங்க ஆர்வம் உள்ளவர்-களும், தங்கள் எண்ணத்தை தொழிலாக மாற்ற உதவுகிறோம். தொழில் நுட்பம் சார்ந்த சேவை திட்டம், வியாபாரம், உற்பத்திக்-கான திட்டம் இருந்தும், பொருளாதாரம் உட்பட பிற கார-ணத்தால் தொழில் துவங்க முடியாதவர்களுக்கு இத்திட்டம் மூலம் உதவலாம்.அவர்களது யோசனை பெற்று, தொழில் துவங்க வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம். பல்வேறு திட்டங்க-ளுடன் தொழில் துவங்க ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 381 பேர் இதுவரை பதிவு செய்துள்ளனர். அதுபோன்று தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டுகிறோம். இவ்வாறு கூறினார்.

