ADDED : ஏப் 25, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்,யில், திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, திருப்பூர் கோவில்வழி, புதிய பஸ் ஸ்டாண்ட், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
போதிய அளவில் பஸ் இயக்கப்படாததால், பொதுமக்கள் நள்ளிரவு வரை காத்திருந்து பின் சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஓட்டளிக்க வெளிமாவட்டங்கள் சென்றவர்கள் திருப்பூர் திரும்ப ஏதுவாக, இன்று (25ம் தேதி) இரவு முதல் வரும், 27ம் தேதி, சிறப்பு பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்க உள்ளது. திருப்பூரில் இருந்து மதுரைக்கு, 140, தேனிக்கு, 100, திருச்சிக்கு, 70, சேலத்துக்கு, 75 என, 385 சிறப்பு பஸ்கள் மூன்று நாட்களுக்கு இயங்கவுள்ளதாகவும், மக்கள் கூட்டம் அதிகரித்தால் பிற பகுதிகளில் இருந்து பஸ் இயக்கப்படும் என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
