/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜீப்பில் மது பாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது
/
ஜீப்பில் மது பாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது
ADDED : ஏப் 24, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்:
கடம்பூர் போலீசார், நேற்று  அத்தியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த ஜீப்பை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் விற்பனை செய்வதற்காக, 500 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், கடம்பூர் அருகே உள்ள கூட்டார் தொட்டியை சேர்ந்த மாணிக்கம், 60, பெரியசாமி, 35, ராமர், 29, தொண்டூரை சேர்ந்த ராஜன், 59, ஆகிய நான்கு பேரும் மது பாட்டில்களை விற்பனை செய்வதற்காக ஜீப்பில் வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. பின்பு, நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து, 500 பாட்டில்கள், ஜீப்பை பறிமுதல் செய்தனர்.

