ADDED : ஆக 27, 2025 01:13 AM
கோபி, கோபி அருகே இருகாலுாரில், நேற்று முன்தினம் பள்ளித்தில் ஒரு லாரி இறங்கி நிற்க, அதன் அருகே நின்றிருந்த நான்கு சிறுவர்களை அப்பகுதி மக்கள் பிடித்து, கோபி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், கோபி சரவணா தியேட்டர் சாலையில் ஒரு பட்டறையில் நின்றிருந்த, கோபி பிரசாந்த் என்பவரின் லாரி ஒயரை துண்டித்து திருடி சென்றது தெரிய வந்தது. சிறுவர்களான நால்வரும் கிடைத்த கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர். லாரியை திருடி பண்ணாரி கோவிலுக்கு செல்லும்போது டயர் பள்ளத்தில் இறங்கியதால் நால்வரும் சிக்கியது தெரிய வந்தது.
லாரியை விற்று கிடைக்கும் பணத்தை கொண்டு செலவு செய்ய திட்டமிட்டிருப்பதும் தெரிந்தது. சிக்கிய நால்வரில் இருவர் ஏற்கனவே இதேபோல் ஒரு லாரியை களவாடியுள்ளனர். பிரசாந்த் புகாரின்படி நான்கு சிறுவர்களையும் கைது செய்த போலீசார், ஈரோடு மாவட்ட இளஞ்சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தி, கோவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.