ADDED : ஜூலை 06, 2026 04:19 AM
ஈரோடு:மொடக்குறிச்சி, சோளங்காபாளையத்தில்
சேகர் என்பவருக்கு சொந்தமான கரும்பு காட்டில் நேற்று மதியம்,
12:20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
மொடக்குறிச்சி தீயணைப்பு
வீரர்கள் மதியம்ல 2:15 மணி வரை போராடி தீயை அணைத்தனர். இதில் கரும்பு,
சோகை, 70 தென்னை மரங்கள் (தென்னம் பிள்ளைகள்), வாழை தோட்டத்தில் இருந்த
சருகுகள் தீக்கிரையாகின. மின் கம்பியில் இருந்து விழுந்த
தீப்பொறியால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
* 46 புதுார்
பெரியார் நகர் சின்னியம்பாளையத்தில் குப்பை கிடங்கு உள்ளது. அங்கு
தீ வைக்கப்பட்டதால், காற்றில் பரவி அருகில் இருந்த பறையன்காடு
தோட்டத்திலும் தீ பிடித்தது. இதில் வைக்கோல் போர் எரிந்து
சாம்பலானது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
* கஸ்பாபேட்டை
செங்கோடம்பாளையம் வீதியில், ஜோதி என்பவருக்கு சொந்தமான
வைக்கோல் போர் கட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 50 வைக்கோல்
போர் கட்டுகள் தீக்கிரையாகின. ஈரோடு தீயணைப்பு வீரர்கள் தீயை
அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
* ஈரோடு,
மேளகவுண்டன்பாளையத்தில் சதீஷ் குமார் என்பவருக்கு சொந்தமான, 2
ஏக்கர் காய்ந்த புல்லில் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள்
முக்கால் மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
