ADDED : ஆக 29, 2026 06:56 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்:திருப்பூர்
மாவட்டம், வெள்ளகோவில் அருகே வள்ளியரச்சல்கிராமம்
செட்டியார்பாளையம் தோட்டக்காட்டை சேர்ந்தவர் பெரியசாமி, 55,
விவசாயி,
இவர் 20க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு
சென்றுள்ளார். மறுநாள் காலை பார்த்த போது, வெறிநாய்கள் கடித்து நான்கு ஆடுகள் இறந்து கிடந்தன. நான்கு ஆடுகள் படுகாயம் அடைந்தன.
வீரசோழபுரம் கால்நடை மருத்துவர் ரமணன், காயமடைந்த ஆடுகளுக்கு
சிகிச்சை அளி-த்தார். இறந்த ஆடுகளுக்கு பிரேத பரிசோதனை நடத்தி
புதைக்கப்பட்டது.
