தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சட்ட விரோதமாக இயங்கிய 4 கரித்தொட்டி ஆலை இடிப்பு

சட்ட விரோதமாக இயங்கிய 4 கரித்தொட்டி ஆலை இடிப்பு

சட்ட விரோதமாக இயங்கிய 4 கரித்தொட்டி ஆலை இடிப்பு


ADDED : ஜன 22, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 04:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரம் அருகே, சட்ட விரோதமாக இயங்கி வந்த, 4 கரித்-தொட்டி ஆலைகள், இடிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட தாசர்பட்டியில், தேங்காய் தொட்டிகளை எரித்து கரியாக்கும் ஆலையால், சுற்றுச்சூழல் மாசு-படுவதாக புகார் வந்தது. இதன்படி கடந்த 2017 ஏப்.,12ல், தாரா-புரம் உட்கோட்ட நடுவர் மற்றும் உதவி ஆட்சியரால் நேரடி ஆய்-வுக்கு உட்படுத்தப்பட்ட போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனு-மதியின்றி, ஆலை இயங்கியது தெரிந்தது. இதையடுத்து, 3 வாரத்-துக்குள் ஆலையை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், தொடர்ந்து ஆலை இயங்கி வருவதாக குற்றச்சாட்டு இருந்தது.இந்நிலையில் கடந்தாண்டு நவ., 21ல், அதிகாரிகள் நடத்திய ஆய்வின் போது, பொன்னாபுரம் எல்லைக்குள் 4 இடங்களில் உரிய அனுமதி இன்றி கரித்தொட்டி ஆலைகள் இயங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 4 ஆலைகளையும் இடித்து, அறிக்கை தரும்படி, மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே உத்த-ரவிட்டார். அதன்படி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறி-யாளர் கார்த்திகா, தாராபுரம் தாசில்தார் ராமலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், 4 கரித்தொட்டி ஆலைகளும் பொக்லைன் மூலம் இடிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us