ADDED : மார் 26, 2026 01:15 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று முன்தினம் கேட்பா-ரின்றி ஒரு பை கிடந்தது. ஈரோடு மதுவிலக்கு போலீசார், பையை சோதனை செய்தனர்.
அதில், 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம். இதற்கு யாரும் உரிமை கோரவில்லை.
ரயிலில் யாரேனும் கடத்தி வந்திருக்கலாம் என தெரிகிறது. கஞ்-சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்துள்ளனர்.
