தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வேன் ஏற்றி பள்ளி மாணவி கொலை குற்றவாளிகளுக்கு உதவிய 4 பேர் கைது

வேன் ஏற்றி பள்ளி மாணவி கொலை குற்றவாளிகளுக்கு உதவிய 4 பேர் கைது

வேன் ஏற்றி பள்ளி மாணவி கொலை குற்றவாளிகளுக்கு உதவிய 4 பேர் கைது


ADDED : மார் 09, 2024 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி, பவானிசாகரை அடுத்த எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் சுபாஷ், 24; வேறு சமூகத்தை சேர்ந்த சத்தியமங்கலம் காந்தி நகரை சேர்ந்த சந்திரன் மகள் மஞ்சுவை, சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்தார்.

இதனால் மஞ்சுவின் பெற்றோர் சந்திரன், 58, சித்ரா, 38. கடந்த, 6ம் தேதி சுபாஷ் பைக்கில், பள்ளி மாணவியான தங்கை ஹாசினியை, பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அப்போது பிக்-அப் வேனை ஓட்டி வந்த சந்திரன், அதிவேகமாக சென்று பைக் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த மாணவி இறந்தார். பவானிசாகர் போலீசார் தனிப்படை அமைத்து, ஊட்டியில் பதுங்கிய தம்பதியை, நேற்று முன்தினம் கைது செய்தனர். இதற்கிடையே கொலைக்கு உடந்தையாக இருந்த கோவை, அன்னுார் தட்டாம்புதூரை சேர்ந்த கார் டிரைவர் அம்மாசைக்குட்டி, 46; கார் உரிமையாளரான அன்னுார் ஜெகதீஷ், 35; சித்ரா உறவினரான குன்னத்துாரை சேர்ந்த வடிவேல், 41; சந்திரனின் உறவினரான அன்னுார், அல்லிக்காரன்பாளையம் கார்த்தி, 33, என நான்கு பேரை, பவானிசாகர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us