/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாலியல் துன்புறுத்தல் புகாரில் 4 பேர் கைது
/
பாலியல் துன்புறுத்தல் புகாரில் 4 பேர் கைது
ADDED : மே 09, 2025 01:50 AM
ஈரோடு, ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, ஈரோடு அனைத்து மகளிர் போலீசில், சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். விசாரித்த போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து கிருஷ்ணன், 21, சந்தோஷ், 25, மணிகண்டன், 25 மற்றும் குகன், 23, என நால்வரை கைது செய்தனர்.
இவர்கள் நால்வரும் ஈரோட்டை சேர்ந்தவர்கள். வழக்கில் ஈரோட்டை சேர்ந்த ரஞ்சித், 23, என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.* ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமி மாயமானார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, மொடக்குறிச்சி போலீசார் விசாரித்தனர். தஞ்சாவூரை சேர்ந்த திருமணமான தொழிலாளி வசந்த், 26; சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரிந்தது. சிறுமியை மீட்ட போலீசார், போக்சோ பிரிவில் வசந்த்தை கைது செய்தனர்.

