ADDED : செப் 06, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
சூளை ஈ.பி.பி.நகரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சங்கர், 44; வ.உ.சி.,
பூங்கா நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க சென்றார்.
அப்போது வந்த நான்கு பேர் அவரை தாக்கியுள்ளனர். வீரப்பன்சத்திரம்
போலீசில் புகாரளித்தார்.
விசாரித்த போலீசார் அவரை தாக்கிய, 46
புதுார் 19 ரோடு கருக்கம்பாளையம் முனியப்பன் கோவில் பகுதி அப்பாஸ்
மந்திரி, 38; வீரப்பன்சத்திரம் மிட்டாய்காரர் வீதி காய்கறி
வியாபாரி அலாவுதீன், 38; கொல்லம்பாளையம் எலக்ட்ரீசியன் ராஜா, 42;
ஈரோடு ஜின்னா மைதானம் வளையக்கார வீதி டிரைவர் அப்துல் சமத், 40,
ஆகியோரை கைது செய்தனர். இதில் அப்பாஸ் மந்திரி, காவலர் மித்ரன் என்ற மாத
இதழ் நிருபர் என்பது குறிப்பிடத்தக்கது.
