ADDED : ஆக 07, 2026 05:34 AM
அறச்சலுார்:அறச்சலுார்
கஸ்துாரிபாகிராமம் வெட்டுகாட்டு வலசு பொன்னுசாமி மகன் சரவணன்,
30; நத்தகாடையூர் குளிர்பான ஆலை பாய்லர் ஆப்பரேட்டர். பைக்கில்
வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. ஆலைக்கு சென்று பொன்னுசாமி
கேட்டபோது, நான்கு நாட்களாக வேலைக்கு வரவில்லை என்று தெரிவித்தனர்.
நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் தகவல் இல்லை. மகனை கண்டுபிடித்து
தருமாறு தாய் பாப்பாத்தி புகாரின்படி, அறச்சலுார் போலீசார்
வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
* மொடக்குறிச்சி லக்காபுரம்
முத்துகவுண்டன்பாளையம் நால்ரோடு பகுதியில் வசிக்கும்
ஆனந்தராஜ்-ஜெனீபர் மகன் யஷ்வந்த், 19; ஈரோட்டில் ஒரு கல்லுாரியில்
முதலாமாண்டு பி.பி.ஏ., படித்தார். சரிவர கல்லுாரிக்கு செல்லாமல்
மொபைல்போனில் பிரீ-பயர் விளையாட்டு விளையாடியதால், பெற்றோர்
வேலைக்காவது செல்ல அறிவுறுத்தினர். இந்நிலையில் வீட்டில் இருந்து
மாயமாகி விட்டார். புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் தேடி
வருகின்றனர்.
* சித்தோடு அருகே கொங்கம்பாளையத்தை சேர்ந்த
மூட்டை துாக்கும் தொழிலாளி நல்லசாமி, 53; இவரின், 15 வயது மகள்,
கவுந்தப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம்வகுப்பு படிக்கிறார்.
ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் மாயமாகி
விட்டார். நல்லசாமி புகாரின்டி சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.
* அத்தாணி அருகே புதுக்காட்டை சேர்ந்தவர் பாலாஜி.
இவரின் மனைவி, மேனகா, 22; தம்பதிக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை
உள்ளது. இந்நிலையில் குழந்தையுடன் மேனகா மாயமாகி விட்டார். பாலாஜி
புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார் தேடி வருகின்றனர்.
