/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரவில் தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி
/
இரவில் தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி
ADDED : டிச 21, 2025 06:31 AM
ஈரோடு: ஈரோடு வில்லரசம்பட்டி, கிரீன் கார்டன் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிசாமி. தோட்டத்தில் ஆடு, கோழி வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பட்டியில் ஆடு, கோழிகளை அடைத்திருந்தார். நேற்று காலை பட்டிக்கு சென்றபோது நான்கு ஆடுகள் இறந்து கிடந்தன. 10க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளை காணவில்லை. புகாரின்படி ஈரோடு கால்நடைத்துறை டாக்டர்கள், மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர். தெருநாய்கள் கடித்து பலியானது தெரிய வந்தது.
ஓராண்டுக்கு முன் வில்லரசம்பட்டியில், தெருநாய்கள் கடித்து குதறியதில், ஆடுகள், ஒரு பசு மாடு, நாட்டுக்கோழி பலியாகின. இந்நிலையில் மீண்டும் தெருநாய்கள் ஆடுகள் பலியானதால், கால்நடை வளர்ப்போர் பீதி அடைந்துள்ளனர்.

